Tag Archive | குழந்தைப்பருவம்

மழலைக்காலம் (6)

குழந்தை கைபிடித்து

குழந்தை கை பிடித்து

குழந்தைகளின் கை பிடித்து

அவர்களைக் கூட்டிச்செல்லும்

நேரங்களிலெல்லாம்

குழந்தைகளே கூட்டிச்செல்கிறார்கள்

நம் சிறைகளுக்கு வெளியே

நம்மை …

குழந்தை மனம்

Image

கடந்து போகும் குழந்தைகளை

காணும் போதெல்லாம்,

கடந்து வந்த குழந்தைத் தனங்கள்

சத்தம் போட்டு

கத்த ஆரம்பித்துவிடுகின்றன…

எனக்குள் எப்போதும்.

-விஜயன்.துரை