Tag Archive | கவிதையும் நானும்

முடிவிலி

 
முடியாமல்
முடிக்கப்பட்டிருந்த
துவக்கமில்லாத
கவிதை ஒன்றை
முடித்துவைக்க
முடிவெடுத்து…
     ***
முயற்சிகளின்
முடிவில்
முடியாமல்
யோசித்திருக்கிறேன்..
    ***
தி ,அந்தம்
ஏதுமின்றி
     ***
முடிவிலா
எண்ணிக்கையில்
முடிவுகள்
ஏதுமின்றி
     ***
பிரபஞ்சப் பெருவெளியின்
எல்லா
இடங்களிலும்
இரைந்து
கிடக்கின்றன…
     ***
வார்த்தைகள்
ஏதுமற்று…
ரகசியமாய்
அந்த
கவிதைகள்
     ***
துவக்கமும்
முடிவும்
கொண்ட
ஒவ்வொரு
கவிதையும்
தோற்றுத்தான்
போகிறது..
     ***
ந்த
துவக்க முடிவிலா
கவிதைகளை
துவங்கி முடிக்கும்
முயற்சியில்
     ***

அந்த ஏதோவொன்று

Image

ப்போதும் என்னை

நிறைத்திருக்கிறது

துவென்று தெரியாத

அந்த ஏதோவொன்று..

நிஜத்திற்கும்

நிழலுக்குமான

இடைவெளியை,

 னவுகளுக்கும்

காட்சிகளுக்குமான

சூனியத்தை ,

ல்லையற்றதற்கும்

எல்லைக்குமான

நீளத்தை

சகலத்தையும்

மறைத்தபடி….

 நினைவுகளுக்கும்

நிகழ்வுகளுக்கமான

வெற்றிடத்தில்

என்னை

நிறைத்தபடி

னக்கும்

எனக்குமான

தூரத்தில்

ப்போதும் என்னை

நிறைத்திருக்கிறது

எதுவென்று தெரியாத

அந்த ஏதோவொன்று..