Archives

மழலைக்காலம் (8)

Small girl in autumn forest

எவ்வளவு என்ற கேள்விகளுக்கு

இவ்வளவு என்று சொல்லி

இருகை விரித்து

அகண்ட கரங்கள் கொண்டு

புன்னகையுடன் நிற்கும்

உன் சிறு கைகளுக்குள்

அடங்கிப்போய்

சிறியதாகி விடுகிறது

அகிலங்கள் அத்தனையும் !

Advertisements

மழலைக்காலம்(7)

மழலைக்காலம்

மழலைக்காலம்

  • ஞே, ங்கா, ம்பா…

இன்னும் என்னென்னமோ !

  • ஏதேதோ பேசுகிறார்கள்

புதிரான மொழியில்

  • அர்த்தமற்ற வாழ்க்கையில்

அர்த்தம் சேர்க்கும்

அர்த்தமற்ற வார்த்தைகள்

  • தெரியாத கடவுளுக்கு

தெரிந்த பாஷை

விஞ்ஞானம் தேடிக்கொண்டிருக்கும்

பிரபஞ்சத்தின் ரகசியம்

  • பிரபஞ்சம் அனைத்தையும்

தனக்குள் ஒளித்துக்கொண்டு

ஒவ்வொரு குழந்தையிடமும்

ஒலித்துக்கொண்டு இருக்கிறது

  • ஞே, ங்கா, ம்பா…

இன்னும் என்னென்னமோ !