Archive | July 2015

கலாம் இறக்கவில்லை !

 எழுந்திரிச்சு வாருமய்யா !
————————————————–
 
கண்டதையும் எண்ணி மனம்
கவலை கொண்ட வேலையிலே
கனவின் விதையெடுத்து
கண்களில் விதைத்தவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !
நம்பிக்கை ஒளியிழந்து
சோர்ந்திருந்த பொழுதுகளில்
வார்த்தைகளாய் வந்தெனக்கு
நல் வாக்கு கொடுத்தவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !
நீ பிறந்த மண்ணினிலே
பிறந்தவன் நானென்று
பெருமை பாடி நான் திரிய
புகழ சேர்த்து வச்சவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !
வாழ்ந்து கெட்ட தேசமிது
மறுபடியும் வாழுமென்று
வாக்கு ஒன்னு கொடுத்தாயே !
நீ கண்ட பெருங்கனவ
நெசமாக்கிப் பார்க்குமுன்னே
என்னையா அவசரம்
உனக்கிப்ப கண்ணுறங்க !
பாரத தேசமிதை
பார்புகழும் நாள் காண
நீ இங்கு வேணுமய்யா !
உன் கனவு நெசமாகும்
எழுந்திரிச்சு வாருமய்யா !
நீ விதைச்ச விதையெல்லாம்
நாளைக்கு மரமாகும்
முளைச்ச மரமெல்லாம்
உனைப் பார்க்க உயிரேங்கும்
எழுந்திரிச்சு வாருமய்யா !
விழிப்பில்லா தூக்கம் கொண்டு
நீ தூங்கி விட்டதாக
எல்லோரும் சொல்லுறாங்க
அவங்க வாக்கைப் பொய்யாக்க
எழுந்திருச்சு வாருமய்யா !
யார் யாரோ வந்தாங்க
யார் யாரோ போனாங்க
நடமாடும் உயிராக
நான் பார்த்த ஒரு தலைவன்
நீ மட்டும் தானய்யா !
கோடித்துளி கண்ணீர் கொட்டி
தேசமே அழுகுதய்யா !
எழுந்திரிச்சு
வாருமய்யா !
மாணவர்கள் மத்தியிலே
பேசிக்கொண்டே மறஞ்சுப்போக
பேச்சோடு பேச்சாக
மூச்சோடு மூச்சாக
காத்தோடு கரைஞ்சுப் போக
கனவெதுவும்
கண்டீரோ !
உன்னதமானவர்களின்
உன்னத கனவுகள்
உண்மையாகுமென்று
உரைத்துப்போனவரே !
உம் கனவு பலிக்குமென்று
எனக்கு நம்பிக்கை இருக்குதய்யா !
எழுந்திரிச்சு வாருமய்யா !
(தலைவனே உம்மை தலைவணங்குகிறேன். நீ இறக்க மாட்டாய் என எப்போதும் நம்புகிறேன்)
Advertisements