Archive | January 2014

கானல் கொத்திப் பறவை !

கானல் கொத்திப் பறவை

கானல் கொத்திப்பறவை

வாழ்க்கையின்
சன்னல் வழியே
எட்டிப்பார்த்துக்
கொண்டிருந்தேன் !

கனவுச்செடிகளின்
தோட்டம் நிறைத்தபடி
ஓடிக் கொண்டிருந்தது
கானல் நீராலான
பெரு நதியொன்று,

நதியோரமாய்…

பார்வைகளை
தூரம் செலுத்தி
கானலைக்
கண்களால் பருகியபடி
எதற்காகவோ
காத்துக் கிடந்தது
சிறு பறவையொன்று

திடிரென்று
வீசத் துவங்கிய புயலொன்றில்

கானல் நதியின் சுழலுக்குள்
வீசப்பட்டது
சிறு பறவை

சட்டென
சாத்திக்கொண்டது
சன்னல்

பறந்து வந்து விழுந்த
பறவையின் சிறகை
கைகளில் ஏந்தியபடி

கானல் நதியோரம்
இன்னொரு
பறவையை
அனுப்பி வைக்க
சன்னலை
திறந்து கொண்டிருக்கிறேன்
மறுபடியும்…..

அனைவருக்கும் என் இனிய புது வருட வாழ்த்துக்கள் 🙂 சந்தோசங்கள் நிறைந்ததாய் பூத்திருக்கட்டும் புது வருடம் !!!