வார்த்தை சிதறல்கள்…

சில
நேரங்களில்
என்
மனக் கோப்பை
வார்த்தைகளால்
நிரம்பிப்போய்
குழம்பியபடி
புலம்பியபடி
கிடக்கிறது..
   *******
இனிப்பு
கசப்பு
லயிப்பு
வியப்பு
இப்படியாக
கோப்பை
நிறையும்
தருணங்களில்
எல்லாம்..
   *******
மனதை
மெல்லமாய் சாய்த்து
என்னிலிருந்து
கொஞ்ச தூரத்தில்
தூக்கிப் பிடித்தபடி
தூரமாகிப் போய்
நிற்கிறேன்…
   *******
கோப்பையிலிருந்து
கொஞ்சம்
கொஞ்சமாக…
நிறைந்து
கிடக்கும் வார்த்தைகள்
சிந்த
ஆரம்பிக்கின்றன
சின்னச்
சின்ன சிதறல்களாக
   *******
கொட்டுகிற
மழையில்
சிரித்தபடி
நனையும்
சின்னக்
குழந்தையென
   *******
ஒன்றன்
பின் ஒன்றாக
ஒவ்வொன்றாய்
வந்துவிழும்
வார்த்தைகளை
கைகளில்
ஏந்தியபடி
நான்
   *******
வார்த்தைகள்
வற்ற வற்ற
காலியாகிக்
கொண்டே வருகிறது
கோப்பை !
   *******
சிதறிய
வார்த்தைகளும்
காலி
கோப்பையும்
கையுமாக
   ***
வானத்தை
வெறித்தபடி
வெறுமனே
அமர்ந்திருக்கிறேன்
   ***
கையிலிருந்த
வார்த்தைகளும்
சிதறிக்கொண்டிருக்கிறது
இப்போது !
Advertisements

4 thoughts on “வார்த்தை சிதறல்கள்…

 1. அருமை… டப்பா மீண்டும் மீண்டும் நிறைந்து கொண்டே தானே இருக்கிறது… பின்னே என்ன தம்பி நிறைய நிறைய எடுத்துக் கொண்டே இரு…..

 2. வார்த்தைகள்
  வற்ற வற்ற
  காலியாகிக்
  கொண்டே வருகிறது
  டப்பா !

  வார்த்தைகள் நீர்ச்சுனையாய் ஊற்றெடுக்கட்டும்

  அருமை வாழ்த்துக்கள்

 3. வற்றாத ஊற்றென வார்த்தை வரும்போது
  பற்றா திருப்பதோ பார்த்து!

  டப்பாவிலிருந்து கொட்டும் வார்த்தைகளைக்
  கவிச்சரமாகக் கோர்த்தீர்களோ.. அருமை!

  வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s