காத்திருப்பின் வலி…

 

ப்போது பார்த்தாலும்

எனக்கு பதிலாக

உன் பிம்பம் தான் காட்டுகிறது

முகம் பார்க்கும் கண்ணாடி

ன் பேனா கூட

உன் பெயரை

மனப்பாடம் செய்து விட்டது

நொடிக்கொருமுறை

சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது

என் கடிகாரம்

உன்னை பார்க்க வேண்டுமென்று

ன் தோட்ட பூக்கலெல்லாம்

ஒற்றைக் காலில் நிற்கின்றன

உன் கூந்தலில் குடியேற வேண்டுமென…

ன்னை தூங்க விடாமல்

எழுப்பி விடுகிறது

உன் அணைப்பிற்காக ஏங்கும்

என் தலையணை

னம் முழுக்க

உன்னை நிறைத்து வைத்துக்கொண்டு

எனக்கு இடம் தர மறுக்கிறது

என் மனது

ந்தன் வாசம்

கேட்டு கேட்டு

காய்ச்சல் வந்து கிடக்கிறது

எந்தன் சுவாசம்

சொல்லி விடு

எப்போது வரப்போகிறாய்

என்னோடு..

                                      -விஜயன்.துரை

Advertisements

9 thoughts on “காத்திருப்பின் வலி…

  1. இந்த வாலன்டைன்ஸ் தினத்திற்குள் வந்துவிடுவாள், கவலைப் படாதீர்கள், விஜயன்!
    கண்ணாடி, பேனா, தலையணை, தோட்டத்துப் பூக்கள், மனது, சுவாசம் இப்படி எல்லாம் தேடித் பரிதவிக்கும் போது வராமல் இருக்க மாட்டாள்!

  2. இப்படி எழுதுவது அவங்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் வந்து விட்டிருப்பாங்களே ?

  3. விஜயன், காதல் மனதை மணத்துடன் சொல்கிறது கவிதை. வோர்ட் ப்ரெஸ் தளத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.இனி தவறாது வருகிறேன்.

  4. உங்கள் கவிதைப் படித்து , உங்கள் வலி புரிந்து,
    நீங்கள் எதிர்பார்ப்பவள் விரைவில் வந்து விடுவாள்.

    அதற்காக முன்கூட்டியே வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s