Archive | February 2013

காத்திருப்பின் வலி…

 

ப்போது பார்த்தாலும்

எனக்கு பதிலாக

உன் பிம்பம் தான் காட்டுகிறது

முகம் பார்க்கும் கண்ணாடி

ன் பேனா கூட

உன் பெயரை

மனப்பாடம் செய்து விட்டது

நொடிக்கொருமுறை

சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது

என் கடிகாரம்

உன்னை பார்க்க வேண்டுமென்று

ன் தோட்ட பூக்கலெல்லாம்

ஒற்றைக் காலில் நிற்கின்றன

உன் கூந்தலில் குடியேற வேண்டுமென…

ன்னை தூங்க விடாமல்

எழுப்பி விடுகிறது

உன் அணைப்பிற்காக ஏங்கும்

என் தலையணை

னம் முழுக்க

உன்னை நிறைத்து வைத்துக்கொண்டு

எனக்கு இடம் தர மறுக்கிறது

என் மனது

ந்தன் வாசம்

கேட்டு கேட்டு

காய்ச்சல் வந்து கிடக்கிறது

எந்தன் சுவாசம்

சொல்லி விடு

எப்போது வரப்போகிறாய்

என்னோடு..

                                      -விஜயன்.துரை