கண்ணீர் துடைத்த கவிதை விரல்

 

வன் எண்ணங்கள் சிகரம் தொடும் உயரம் செல்லக்கூடியவை !,அவன் எண்ணங்கள் உயரே கிளம்புகிற பெரும்பான்மையான சமயங்களில் மற்றவர்களின் கேலியும்,கிண்டலும் அவன் எண்ணங்களுக்கு உயரத் தடை  ஆவதுண்டு ,அவனிடம் பேசுகிறவர்கள் தகாத வார்த்தைகளை சொல்லி ,தாழ்வு மனப்பான்மைக்குள் அவனை தள்ளி விடுகிற சமயங்களிலெல்லாம் அவன் கண்ணீருக்குள் மூழ்கி விடுவதுண்டு ,பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் அவன் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்த ஒரு ராத்திரியில் கவிதை ஒன்று அவனோடு பேச ஆரம்பித்தது !

னவுகளால் நிறைந்தவனே !

கண்ணீரில் மிதப்பவனே !

கண்ணிருக்கும் கண்ணீரை

துடைத்துவிட்டு வா உடனே !

♦முட்டாள் நீயென்று உலகம் சொன்னவுடன்முட்டாளாய்  மாறிவிடும் முட்டாள் நீயில்லை !

சொற்களை நம்பி சோகம் கொள்வதும் ,

வார்த்தைகள் கேட்டு வருத்தம் கொள்வதும்

மடையர்கள் வேலை , மடையன் நீயில்லை !

மேகம் மறைத்தாலும் காகம் பறந்தாலும்

வானம் மாறாது வையத்தில் வீழாது

ன்னைப் பார்த்து உலகம் சொல்லும்

இழிமொழி கேட்டு தாழ்ந்து விடாதே!

கனவுகள் கலைக்க கணைகள் தொடுக்கும்

கரங்கள் கண்டு கலங்கி விடாதே !

வானம் போல வாழப்  பழகு

புல்நுனி மீது பனித்துளி போல

முள் நுனி மீதும் உறங்கப் பழகு

ட்டி வைத்த கோட்டை தனை

கண்ணீரில் கரைத்திடாதே !

மனம்  வரைந்த சித்திரத்தை

அழுதழுது அழித்திடாதே!

ன்னை அழவைத்த

உலகம் இதைப்பற்றி

உனக்கு தெரியுமா ?

தைசெய் ” “இதைசெய் ” என்று

அறிவுரை ஆயிரம் சொல்லும்

உந்தன் வருத்தம் போக்க

ஆறுதல் வார்த்தை சொல்லும்

வெற்றி பெற வழிகள் சொல்லி

வேறு பாதை உனை திருப்பும் ;

ஆடு நனைய அழுகை கொள்ளும்

அதிசய ஓநாய்க்  கூட்டம்

யார் மீதும் முழுதாக

நம்பிக்கை  கொள்ளாதே!

எவர்பற்றி எவரிடமும்

எப்போதும் சொல்லாதே !

சுவரில்லா சித்திரங்கள்

பார்வைக்கு படுவதில்லை

சுவரை முதலில் கட்டு

சித்திரம் அதன்பின் தீட்டு

னவுகள் கண்ணீரில்

மூழ்கி விடக்கூடாது !

னவை கனலாக்கி

கண்ணீர் காயவை!

உணர்வை உணவாக்கி

கனவை வாழவை !

னவுகளால் நிறைந்தவனே !

கண்ணீரில் மிதப்பவனே !

கண்ணிருக்கும் கண்ணீரை

துடைத்துவிட்டு வா உடனே !

(இந்த உலகத்திற்கு நான் வந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன …!)

                                                                                                                                                          -விஜயன்.துரை

4 thoughts on “கண்ணீர் துடைத்த கவிதை விரல்

  1. கவிதை மிக நன்றாக பேசி இருக்கிறது… வாழ்வில் ஏற்படும் அவமானங்கள் எல்லாம், நமக்கு வெளிச்சம் தரும் விளக்குகள்…

    வாழ்த்துக்கள் நண்பா…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s