நகர(நரக)மழை

           மழைநீரில் தன்னை முழுவதும் நனைத்திருக்கும் மின் கம்பி:         இடம்:சென்னை கோயம்பேடு
 
 
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த மழை
 (மழையை ரசிப்பதற்கும்,மழையில் நனைவதற்கும் நம் அன்றாட பணிகள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம் இருப்பதில்லை,அன்பின் ஊற்றாக வானம் பூமி மீது ஊற்றும் மழை மீது நமக்கு பெறும்பாலும் வெறுப்பு தான் வருகிறது,நகர வாழ்வில் மழை என்பது நரகமாக தான் இருக்கிறது)அன்றைக்கு மழையின் வீச்சு பூமி மீது கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.மழையை திட்டிய படியே என் அலுவலக பணிக்கு பேருந்து பிடிக்க சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன்…சரசர ஓசையில் மெல்லிய குரல் ஒன்று கேட்டது… அது வெறும் மழையின் சரசரப்பு தான் யாரோ பேசுவது போலவே என் காதுகளுக்கு கேட்டது.துளித்துளியாக பூமி வரும் மழையில் ஒரு துளி மெல்ல என் காதருகே வந்து என்னோடு பேச துவங்கிற்று…இப்பொழுதெல்லாம்…

எங்களை ஏன் யாரும் ரசிப்பதே இல்லை?

எங்களின் வாழ்வின் அதாரம் “நீர்” என்று

எப்போதும் எங்களை வாயார புகழ்வீர்களே!

எங்கே போனீர் எங்களை வரவேற்காமல்…நித்தமும் நீங்கள் வேண்டுகிறவர்கள்

மொத்தமாய் வந்திருக்கிறோம்

வரவேற்க வில்லை என்றாலும் பரவாயில்லை

கொட்டித்தீர்க்கும் எங்களை திட்டி தீர்க்காதீர்கள்சாலைகளை சிதைத்து

சாக்கடைகளை நிறைத்து

தொல்லை தர பூமி வந்த 

தொல்லை கும்பல்

இல்லை நாங்கள் !மரங்களின் கையசைப்பில் மனமிரங்கி

தரை இறங்கி தரணி வந்தவர்கள்

வற்றிக்கொண்டிருக்கும் உயிர்த்துளியை

துளித்துளியாய் நிறைக்க வந்தவர்கள்வேலைகளை முடக்க வந்த 

முட்டாள் மழையென்று

முனுமுனுப்பு செய்பவர்களே !அன்றாட வாழ்வை பாதிக்க வந்த

படுபாவி மழையென்று

பல்லவி பாடுபவர்களே !கொஞ்சம் கவனியுங்கள்ஓய்வின்றி சுற்றும் பூமி

காய்ந்து விடாதிருக்க

கடவுள் அனுப்பிவைத்த

கருணை மனுக்கள் நாங்கள்பால் வற்றிப்போன 

பூமியின் தனங்களில்

மீண்டும் பால் சுரக்க

மருந்தாய் வந்தவர்கள்எம்மை சேமிக்க சொல்லி 

விளம்பரங்கள் செய்கிறீரே !நாங்கள் நகரக்கூட

இந்த நகரத்தில் இடமில்லை

வரவுக்கே “வழி”யில்லை

எம்மை எங்கே சென்று சேமிப்பீர்பாராட்ட சொல்லியோ!

வசைபாட சொல்லியோ!

உங்களை ஒருபோதும்

நாங்கள் கேட்டதில்லை !எங்களுக்கும் அரசியல் தெரியும்

அதிகம் பெய்து அழிக்கவும் செய்வோம் !

அளவாய் பெய்து காக்கவும் செய்வோம் !

பெய்யாதிருந்து வதைக்கவும் செய்வோம் !நீங்கள் வசிக்கும் உலகை

வளர்த்து விட்டவர்கள் நாங்கள்

உறுதியாய் கூறுவோம்

உங்களுக்கு உயிர் தந்தவர்கள் நாங்கள்பூமி காப்பது உங்களுக்கு கடமை

பூமி காப்பது எங்களுக்கு உரிமை

                                                                                           -விஜயன்


நான் கவிதைகளை தனியாக வானம்பாடி என்ற தளத்தில் எழுதி வருகிறேன்,இனி கடற்கரையிலும் எழுத தீர்மானித்துள்ளேன்,கவி வானில் சுற்றி திரியும் வானம்பாடி இனி என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கடற்கரையிலும் பறக்கும்.

Advertisements

6 thoughts on “நகர(நரக)மழை

  1. தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி’ என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடுகிறாள். மழை பெய்யும் போது கவனிக்காமல் மழை பெய்யாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை குறித்த மழையின் கவிதை அருமை.
    வாழ்த்துகள்.

  2. வலைச்சரத்தின் மூலம் வந்துள்ளேன். இன்றைய மழை இல்லா சூழலில் இந்தக் கவிதை அந்த நினைவையாவது மீட்டுத்தருகிறது….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s