(கடவுள் இல்லாத )கோவிலுக்கு சென்றிருந்தேன்……

(ஆலய வழிபாடு – கல்,மண்,மரம்,கட்டை என சாதரண விசயங்களைக் கூட கடவுளாக காண வேண்டும் என்கிற உயரிய சிந்தனையில் உதித்தவை , கோவில்கள் – தன்னிகரற்ற ஆற்றல் மூலங்களாக மதித்து வழிபட வேண்டியவை 
ஆனால் சந்தைப் பொருட்களைப் போலவே பக்தியும் பணத்திற்கு விற்கப்படுகிறது.
கோவில் -கடவுளின் பெயரில் காசு சம்பாதிக்கும் ஒரு வியாபாரத்தளமாக உருமாற்றம் அடைந்துள்ளது. 
கோவிலுக்கு செல்லுதல் என்பது வெறும் சம்பிரதாய சடங்காக மட்டுமே நின்று விட்ட தற்போதைய  நிலையில்.
கோவிலுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிற சத்தங்களுக்குள் அமைதியாய் ஒலித்துக்கொண்டிருக்கிற ஒரு மௌனத்தின் பதிவு… )

டவுளைக் காண வேண்டி
கோவிலுக்குச் செல்லுகிற
எல்லோரையும் போலவே…
கடவுளின் முகவரி என்று முத்திரை தாங்கி
மூலைக்கு மூலை முளைத்து நிற்கும்
கோவில்களில் ஒன்றுக்கு சென்றிருந்தேன்….

 

கோவில்களின் வாசலிலேயே
எப்போதும் இருக்கிற
பிச்சைக்காரகளுக்கு உதவாத இறைவன்
எனக்கு மட்டும் உதவுவான்
என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில்
கோவிலுக்கு சென்றிருந்தேன்

 

ள்ளே சென்ற என்னை
உளமார வரவேற்றது
உணவு தேடி செல்லும்
எறும்புக் கூட்டம் போல
கடவுளை காண,
வரிசையாய் ஊர்ந்து கொண்டிருந்த வரிசை.

 

நீ எனக்கு “வேண்டியதைக்” கொடு
நான் உனக்கு “வேண்டியதை செய்கிறேன்”
-என்று கடவுளுக்கே படி அளப்பவர்களாலும்
நான் உனக்கு இவ்வளவு தருகிறேன்
நீ எனக்கு இதை முடித்துக் கொடு
-என்று கடவுளிடம் வியாபாரம் பேசுபவர்களாலும்
நிரம்பி வழிந்து கொண்டிருந்தது வரிசை

 

னைவரும் சமமென்றும்
எல்லோரும் ஒன்றென்றும்
எப்போதும் சொல்லிக்கொள்ளும்
எல்லாம் வல்ல இறைவன்
தரம் வாரியாக
காட்சி தந்து கொண்டிருந்தான்.

 

திகம் பணமிருந்தால்
அன்பான உபசரிப்புடன்
அடுத்த நொடியே தரிசனம்
கொஞ்சம் குறைவென்றால்
சில நிமிட காத்திருப்புடன்
சிறப்பு தரிசனம்

 

ல்லாத ஏழையென்றால்
இறைவனின் கருணையில்
இலவச தரிசனம்

 

க்கத்தில் உள்ளவனை
இடித்துத் தள்ளிக் கொண்டு
முந்திச் செல்பவனைப் பற்றி
முனகிக் கொண்டு
சத்தமான சலசலப்புடன்
அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது
பக்தர்கள் கூட்டம்

 

ன்பர்களின்
வேண்டுதல்களையும் வேண்டுகோள்களையும்
இறைவனுக்குப் புரியும் மொழியில்
மொழி பெயர்த்து
கற்சிலைகளின் காதுகளுக்குள்
மந்திரமாய் ஓதவும்
கற்சிலைகளின் முன்பு மட்டும்
இறைவன் புகழ் பாடவும்
சிறப்புப் பயிற்சி பெற்ற
பி.ஏ -க்கள் சகிதமாய்
அறைக்குள் அடைபட்டுக் கிடந்த்து
அண்ட சராசரத்தை ஆட்டுவிக்கும்அபார சக்தி
மைதியை கூச்சலிடம்
அடமானம் வைத்துவிட்டு
அமைதியை தேடி
ஆலயம் வந்திருக்கிற
அன்பர்கள்
காசுக்குக் காட்சிப் பொருளாகி
கடவுளின் பெயர் சொல்லி
கதவுக்குள் முடங்கிக் கிடக்கும்
கற்சிலைகள்
டவுள் இங்கில்லை என்று தெரிந்தும் 
கடவுளைக் காண வேண்டி
கோவிலுக்குச் செல்லுகிற
எல்லோரையும் போலவே…
ஏதோ ஒரு நம்பிக்கையில்
கோவிலுக்கு சென்றிருந்தேன்

 

-விஜயன்
(பின் குறிப்பு: எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு)
Advertisements

3 thoughts on “(கடவுள் இல்லாத )கோவிலுக்கு சென்றிருந்தேன்……

  1. மிக மிக அருமை நண்பரே! மூட நம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கும் அப்பாவி மக்கள், தங்களின் கவிதை வரிகளின் மூலம் திருந்தட்டும். அருமை நண்பரே! தொடருங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s