அதிசய ராகம்


(“காதலி இறந்து போய் விட்டாள் …”

என்கிற

செய்தி அவனை சேரும் அந்த “துளி வினாடியில்”

அவனுக்குள் ஆயிரமாயிரம் அதிர்வலைகள்

அதிர்வலைகள் மெல்ல அவனை இறந்து போன அவன் காதலியிடம் அழைத்துச் செல்கின்றன…..)

♥நான் விசித்திரமானவன்

வித்தியாசமானவன்

யாராலும் பார்க்க முடியாத

அதிசயங்களை நேரில் பார்த்தவன்

♥பௌர்ணமி நிலவை பகலில் பார்த்திருக்கிறேன்,

செவ்வாய் கிரகத்தை தொட்டு பார்த்திருக்கிறேன்

குளிரும் சூரியனை அருகில் பார்த்திருக்கிறேன்

மேகத்தை மூடும் வானம் பார்த்திருக்கிறேன்

♥பூவின் சிரிப்பை நேரில் பார்த்திருக்கிறேன்

தென்றல் காற்றை தழுவி பார்த்திருக்கிறேன்

இரவின் நடுவில் விடியல் பார்த்திருக்கிறேன்

தூக்கம் இல்லாமல் தூக்கம் பார்த்திருக்கிறேன்

♥தூண்டிலே மீனாகிய விந்தையை பார்த்திருக்கிறேன்

மீன்களின் வலையில் சிக்கி பார்த்திருக்கிறேன்

மீன்களின் கண்ணீரை துடைத்து பார்த்திருக்கிறேன்

மீண்டும் ஒருமுறை பிறந்து பார்த்திருக்கிறேன்

♥மௌனம் பேசும் கவிதைகள் பார்த்திருக்கிறேன்

கவிதை பேசும் மௌனங்கள் பார்த்திருக்கிறேன்

கனவை கனவில் தேடி பார்த்திருக்கிறேன்

இருந்தும் ‘இல்லாத’ என்னை பார்த்திருக்கிறேன்

♥அதிசயங்களை பார்க்க செய்த

அதிசயத்தை இழந்த பின்னும்

அதிசயமாய்…

அதிசயங்களைப் பற்றி

அதிசய ராகம் பாடும்

அதிசய மனிதன் நான்

♥நான் விசித்திரமானவன்

வித்தியாசமானவன்

யாராலும் பார்க்க முடியாத

அதிசயங்களை நேரில் பார்த்தவன்…

♥கண் முன் இல்லாத உன்னை

கண் மூடி பார்த்’திருக்கிறேன்’

உனை சேரும் ஆசையில்

உடல் பிரிந்து காத்திருக்கிறேன்

(காதலர்கள் இறந்தாலும்   காதல் இறப்பதில்லை)

-விஜயன்

Advertisements

2 thoughts on “அதிசய ராகம்

 1. ‘நீ’ என்ற ஒற்றை
  உயிர் மெய் உயிர் தொலைத்து

  நான் என்ற நூலகம்
  மொத்தம் பொருளற்றுப்
  போனது … its my line for ur situation…

  one small suggestion…if u thought its valuable consider or else forgive me…

  kathali irantha situationla varnikkira mathiri startinglaya kavithai varum…think of it and make ur poem more realistic…it will add taste to urs…

  thappuna sorrynga

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s