யாருக்காக…?


இரவு வானத்தை வெறித்துப் பார்த்தபடி அந்த பெண் தன்னையே அறியாமல் தனக்குள் பேச துவங்குகிறாள்…

♥வெள்ளை முகிலெடுத்து

வேர்வை துடைத்தெறியும்

வெள்ளிக் கல் பதித்த

கருப்புச் சேலைக்காரி

♥வெண்ணிலவ பொட்டாக்கி

நெத்தியில வச்சுக்கிட்டு

நித்தமும் வலம் வரும்

கார்முகில் கூந்தல்க்காரி

♥சூரியன் மறைஞ்ச பின்ன

மெல்ல மெல்ல உள்ள வந்து

தூக்கம் மறையும் முன்ன

மறைஞ்சு போகும் மாயக்காரி

♥தூங்காம விழிச்சிருந்து

தூக்கத்த காத்து நிக்கும்

துவளாத உடம்புக்காரி

துணிச்சல் மனசுக்காரி

♥இரவெல்லாம் இருந்துவிட்டு

பகலிலே மறைஞ்சு போகும்

பகட்டான மினுக்குக்காரி

பகலுக்கு எதிரிக்காரி

♥ரகசிய காட்சிகளின்

அரங்கேற்றம் நடப்பதற்கு

ரகசிய நேரம் தந்த

ராத்திரியின் சொந்தக்காரி

♥நினைக்கிற கண்ணுக்கு

நினைத்த முகமாகும்

முகம் தெரியா முகத்துக்காரி

கனவுகளின் உறவுக்காரி

♥ஒரு நாள் தவறாம

மறக்காம வந்து நின்னு

ராத்திரி முழுக்கா

தூங்காம முழிச்சிருந்து…..

இத்தன வருசமா இவ

யாருக்காக காத்திருக்கா?

என்னப் போல இவளும் கூட

காதலன தொலைச்சவளோ….?

-விஜயன்

Advertisements

2 thoughts on “யாருக்காக…?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s