விரட்டியடிப்பவர்களே…!கொஞ்சம் நில்லுங்கள்

 

(பிளாட்பார வாசிகளின் சார்பாக ஒரு குரல்…)

 பரபரப்பான மனித கூட்டத்தின் பரபரப்புகளுக்கிடையே பவ்யமாய் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது..யாரும் குரல் கொடுக்கவில்லை,அனாலும் அந்த குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது…யாரும் வாய் திறந்து பேசவில்லை ஆனாலும் அந்த மட்டும் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது

ந்த குரல்

நாம் தினம் தோறும் பார்த்துப் பழகிப் போன பழைய முகங்களில் யாரோ ஒருவனின் குரல்…

முகம் தெரியாத,முகவரி இல்லாத முகத்தின் சொந்தக்காரர்களில் யாரோ ஒருவனின் குரல்

பேருந்து நிருத்தங்களில்,ரயில் நிலையங்களின் வாசலில், தெருமுனை ஓரங்களில் நம்மை கடந்து செல்லும் யாரோ ஒருவனின் குரல்

சாலையோரவாசிகளாய் வாழ்க்கையை நகற்றிக் கொண்டிருக்கும் ஜீவராசிகளாய் இருக்கும் அந்த யாரோ ஒருவனின் குரல்

அடிக்கடி விரட்டியடிக்கப் படும் உள்நாட்டு அகதிகளாய் திண்டாடும் அந்த பிளாட்பார வாசிகளின் சார்பாக அந்த யாரோ ஒருவனின் குரல்…

♦பிளாட்பாரங்கள்….

இவை….

நடை பயிலவும்

நடந்து போகவும்

உங்களுக்கு வழிவிடும்

எங்களின் வாழ்வாதாரங்கள்

♦பிளாட்பாரங்களையும்

எங்களையும் தவிர

எங்களின் வாழ்வுக்கு

ஆதாரங்கள் ஏதுமில்லை

 ♦வெயில்…

மழை…

வெளிச்சம்…

இருட்டு…

இயற்கையின் கரங்கள்

எங்களை தழுவிய பின் தான்

உங்களை தொடுகிறது

எங்கள் வீடுகளைப் பற்றி

உங்களுக்குத் தெரியுமா?…

♦இரவில் நிலா விளக்கேற்றி

நட்சத்திர தோரணம் கட்டி,

பகலில் சூரிய விளக்கேற்றி

மேக ஊர்வலம் நடக்கும்..

எங்களின் மாளிகைகள் அவை…

வாகனப் புகையின் வாசம் வீச

ஹாரன் ஓசை இன்னிசை ஒலிக்க

எஞ்சின் சத்தம் தாலாட்டு பாட

எங்களின் உறக்க விழா  அரங்கேற்றம்

தினந்தோறும் நடைபெறும்

எங்களின் மாளிகைகள் அவை…

சாலையின் ஓரம்,

மரங்களின் அடி,

கோவில் படிகள்,

திடீர் நிழல்கள்,

பாலங்களின் கீழே,

எங்கள் மாளிகைகள்

ஆளும் வர்க்கத்தின்

மனங்களைப் பொறுத்தும்

இயற்கை அன்னையின்

குணங்களைப் பொறுத்தும்

அடிக்கடி

இடமற்றத்திற்கு உட்பட்டவை

 ♦“குடிசைமாற்று வாரியம்

இதன் மீது எனக்கு ஆதங்கம்

குடிசையே கனவாகிப்போன

எங்களுக்கு

இது என்ன பதில் சொல்லுமாம்?…..

ஊமையின் கனவுகளை

உலகறிய நியாயமில்லை

 ♦இந்தியாவின் எதிர்காலம் பற்றி

எக்காலமும்

பேசுபவர்களே!…

♦எதிர்கால இந்தியா

உங்களிடம் மட்டுமல்ல

எங்களிடமும் தான் இருக்கிறது

 ♦என் திருநாட்டில்

எங்களவரே அதிகம்…

பரதேசியாய்…

பக்கிரியாய்…

நாடோடிகளாய்…

ஏழைகளாய்…

பிச்சைக்காரர்களாய்…

பல அவாதாரங்களின் ஆதாரமாக

எங்களவர்தான் அதிகம்

 ♦அதிகமாக இருந்தாலும்

ஆதரவு கிடைப்பதில்லை

இதயம் இல்லாத

ஈனர்களின் சுயநல புத்தியால்,

உழைப்பு இருந்தாலும்

ஊதியம் கிடைப்பதில்லை

எத்தர்களின்

ஏமாற்று வேலையால்,

“ஐந்தாண்டு திட்டங்கள்” இருந்தாலும்

ஒன்று கூட கிடைப்பதில்லை

ஒற்றுமையாய் இருந்தாலும்

ஓங்கி வளர முடியவில்லை

*ஔவியம் பிடித்தவர்களால்

நாங்கள்

அஃறிணைகள் ஆக்கப்பட்டோம்

 ♦எங்கள் உயிர்களை.,

பசியெனும் நெருப்பு

வறுமை அடுப்பில்

உணவாய் சமைத்துக் கொண்டிருக்கிறது..

உணர்வு உள்ளவர்களே

உணவு தாருங்கள்

நாங்கள்

உணவாவதற்கு முன்னால்

 ♦உயிர் இருந்த போதும்

சவங்களாய் ஆக்கப்பட்டோம்

உணர்வு இருந்த போதும்

பிம்பங்கள் ஆக்கப்பட்டோம்

உரிமைகள் இருந்த போதும்

உடைமைகள் மறுக்கப்பட்டோம்

 ♦விரட்டியடிப்பவர்களே…!கொஞ்சம் நில்லுங்கள்

அரைநிர்வாணிகளாய் இருந்தாலும்

நாங்கள்

முழுமையாக மானம் உள்ளவர்கள்

பாதியாக உடல் இருந்த போதும்

நாங்கள்

முழு மனிதர்கள்

“நாங்கள் முழு மனிதர்கள்”

நிறம் மாறும்

அரை மனிதர்களிடையே உலவும்

இடம் மாறும்

முழு மனிதர்கள்

*குறிப்பு —*ஔவியம் என்றால் பொறாமை,அழுக்காறு என்று பொருள்

-விஜயன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s