♦எனக்குள்
கவிதைகள் உதிக்கிற
எல்லா சந்தர்ப்பங்களிலும்
என் பேனா
காகிதத்தை
”என்”னால் நிரம்ப செய்கிறது.
♦காகிதம்
”என்”னால் நிரம்புகிற
அந்த வேலைகளிலெல்லாம்
பேனாவும்,காகிதமும்
தங்களின் முழுமைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
முடித்துக் கொள்கின்றன..
♦பெரும்பாலும்..
நான்
காகிதத்தை கவிதைகளால்
நிரப்புகிற எல்லா வேலைகளும்
முழுமைகளின் முடிவு போராட்டங்களாக
முடிந்து விடுகிறது..
-விஜயன்
Advertisements