கண்ணீர் தேசம்..

♦செந்நீர் பூசிக்கொண்டு

கண்ணீரில் தத்தளிக்கிறது

யுத்தத்தின் சத்தம்

நித்தமும் கேட்கும் -அந்த

புத்த தேசம்

♦இங்கே

இதயத்தை

இரைப்பைக்கு

இரையாக்கி விட்ட

இரக்கமற்றவர்கள்

அதிகம்

உறவுகளை இழ்ந்தாலும்

உணர்வுகள் இழக்காத

உன்னதமானவர்களும்

அதிகம்

♦மண் வேண்டி மறைந்து போகும்

தமிழனின் நிலை கண்டு

புல்லாங்குழல் புலம்புகிறது

வீணை விம்முகிறது

நாதஸ்வரம்

அபஸ்வரத்தில் அழுகிறது

கவிதை கதறுகிறது

இசை

வசை பாடுகிறது

♦ஆனால்..

அமைதி மட்டும்

அமைதியாகவே இருக்கிறது

நம் மனதைப் போல

♦உலகின் அதிக இடங்களில்

இருப்பவனும் தமிழன் தான்,

 உலகின் அதிக இடங்களில்

இறப்பவனும் தமிழன் தான்..

 மரணம் தவிர

தமிழனுக்கிங்கு

நிரந்தர சொந்தங்கள்

யாருமில்லை!

♦தமிழனை கொன்று தின்று

கொழுத்துப் போயிருக்கிற

தோட்டாக்களின்

தோட்டமே…

”தமிழ் ரத்தம்” குடித்த பிறகுமா

உனக்குள் இரக்கம் பிறக்கவில்லை?

தமிழனை தின்ற பிறகுமா

உனக்கு இருதயம் வலிக்கவில்லை?

♦சூரிய விளக்கை

வெடிகொண்டு

கறுக்கியவர்களே!

♦சங்கீத ஒலியை

அணுகுண்டுசத்தம் கொண்டு

திருடியவர்களே!

♦தென்றலுக்கு

வன்முறை

கற்றுக் கொடுத்தவர்களே!

♦தமிழன் சிதை கொண்டு

தீயை

பொசுக்கியவர்களே!

♦பூமுகம் தீண்டாத காற்றே!

புல்முகம் பாராத மண்ணே!

கரை தொட பயப்படும் கடலே!

பாரதவாசியை பரதேசியாக்கிய தேசமே!

கடைசியாய் உங்களுக்கொரு வார்த்தை

எங்கள் வானமும்

நட்சத்திரம் காய்க்கும்

எங்கள் மண்ணும்

மனிதம் பூக்கும்

எங்கள் கண்ணும்

கவலை மறக்கும்

எங்கள் இரவும்

நிச்சயம் விடியும்

♦இறந்த பின்னும்

விதையாய்

முளைப்போம்

 இறக்க இறக்க

மீண்டும்

பிறப்போம்

என் தமிழ் இன்னும்

அழிந்து விடவில்லை

 என் தமிழினம் இன்னும்

அழிந்து விடவில்லை

– விஜயன் 

Advertisements

11 thoughts on “கண்ணீர் தேசம்..

 1. வார்த்தைகளின் வலி நெஞ்சில் கனக்கிறது..கண்ணில் நீரை கோர்க்கிறது..நடந்து முடிந்தையும்,நடப்பதையும்,நடக்க இருப்பதையும் ஒரே கவிதையில் உணர்வுடன் சொல்லி இருக்கிறீர்கள்….அருமை!

 2. //எங்கள் வானமும்

  நட்சத்திரம் காய்க்கும்

  எங்கள் மண்ணும்

  மனிதம் பூக்கும்

  எங்கள் கண்ணும்

  கவலை மறக்கும்

  எங்கள் இரவும்

  நிச்சயம் விடியும்//.

  நன்றாக உள்ளது..
  வாழ்த்துக்கள்

 3. அருமை, வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி. என்ற ஒற்றை வார்த்தைகளில் இங்கு என்னால் கருத்துரை இடமுடியவில்லை நண்பா! ஆழ்ந்த வலி. ஒரு இனத்தின் உயிர் கதறல், வீரம் விளைந்த மண்ணில் ஒருவன் தனக்கு நேர்ந்த இழப்புகளை சொல்ல முடியாமல், அவனது உதடுகள் விம்மி துடிக்குமே.., அந்த மனதின் கனம், யாவும் என்னை சுற்றி நின்று கொண்டிருக்கின்றன நண்பா!

 4. இங்கே

  இதயத்தை

  இரைப்பைக்கு

  இரையாக்கி விட்ட

  இரக்கமற்றவர்கள்

  அதிகம்

 5. வணக்கம்
  விஜயன்(அண்ணா)

  யுத்தத்தின் வலிகளையும் மரண ஓலத்தின் வலிகளையும் நித்தம் நித்தம் சுமப்பது எம் தமிழ் இனம்தான் என்பதை அழகாக கவிப்பாவில் சொல்லி விட்டீர்கள் அருமையான கவிதை வாழ்த்துக்கள் அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 6. எந்திரமான எம் வாழ்வில்
  சுந்தரச் சுதந்திரம் தொலைந்ததுவே
  வந்திடுமோ வாழ்வொடு இனிமைகளும்
  தந்திட்ட கவிகண்டே கலங்குகின்றேன்…

  சகோ உங்கள் கவிவரிகள் மனதில் ஆழப்புதைந்த
  பல அவலங்களை வெளியே இழுத்து வருகிறது…

  பொருள் பொதிந்த வரிகள் அனைத்தும்.
  வாழ்த்துக்கள் சகோ!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s