புரியாத புத்தகம்

♥நான் உன்னிடம் கேட்டிருந்த

அந்த புத்தகத்தை

நீ,

என்னிடம் தந்திருந்தாய்.

 

♥படிக்க திறந்த நான்

பதறிப் போனேன்,

வார்த்தைகள் புரியாமல்

குழம்பி போனேன்,

 

♥உன் அணைப்பின் அழுத்தத்தில்

அசந்து போய்

மயக்கத்தில் மாறி மாறிக்

கிடக்கின்றன,

அந்த புத்தகத்தின்

அத்தனை எழுத்துக்களும்,

 

♥முயற்ச்சித்துப் பார்த்தேன்

முடியவில்லை..

மூர்ச்சை ஆகி

முடங்கி கிடந்த

அந்த எழுத்துக்களை

எழுப்பி விட,

 

♥திருப்பித் தருகிறேன்,

சரி செய்து தா

மயங்கிப்போய்

மாறிக்கிடக்கிற

அந்த எழுத்துக்களை.

 

♥மறுபடியும்

மயங்க செய்து விடாதே..

உன்

அணைப்பைத் தாங்கும்

அருகதை

அந்த எழுத்துக்களுக்கு இல்லை…

-விஜயன்

Advertisements

4 thoughts on “புரியாத புத்தகம்

  1. அணைப்பிற்கு நன்றி…தங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் உயரிய சன்மானம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s