24 May 2012
by durairajv
in மழலைக்காலம்
Tags: கவிதை, குழந்தை, குழந்தைப்பருவம், தமிழ், பாப்பா, பொம்மை, மழலை, மழலைக்காலம், baby, tamilpoem
இருந்தும் இல்லாத கண்கள்,
அசைவுகள்
மறந்த கைகள்,
நகரத்தெரியாத
கால்கள்,
திறக்கப்படாத இதழ்கள்,
உயிரினங்களின் உருவம் தாங்கி
உணர்வின்றி உறைந்து கிடக்கும்
உயிரில்லா பொம்மைகள்…
குழந்தைகளின் விரல்கள்
தங்கள் மீது படுகிற போதெல்லாம்,
அவர்களுடன் விளையாட
சிரிப்பை சுமந்து கொண்டு
உயிர் பெற்று விடுகின்றன.
13 Feb 2012
by durairajv
in இலவச DOWNLOADS
Tags: இலவச புத்தகம், காதலர்தின சிறப்பு புத்தகம், காதலர்தினம், காதலின் இரகசியம், காதலின் ரகசியம், காதல், காதல் புத்தகம், புத்தகம், லவ், kathalin rakasiyam, love tamil pdf, loversday special, tamil love book, tamilpdf

காதலின் ரகசியத்தை , அழகாக அதே சமயம் சுருக்கமாக எடுத்துச் சொல்லும் குட்டிப்புத்தகம்..காதல் என்றால் என்ன?,அது ஏன் வருகிறது? என காதலை பற்றிய சகல பரிமானங்களையும் விஞ்ஞான பூர்வமாக சுவைபட விளக்கும் புத்தகம்.
காதலின் ரசிகர்கள்,காதலர்கள்,காதலின் காதலர்கள் என சகலமானவர்களும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கிய 18 பக்க குட்டிப்புத்தகம் .
click here to download(1 mb)
புத்தகத்தை தரவிறக்க க்ளிக் செய்யவும்(1 mb)
10 Dec 2011
by durairajv
in ஊமை மொழிகள்
(ஆலய வழிபாடு – கல்,மண்,மரம்,கட்டை என சாதரண விசயங்களைக் கூட கடவுளாக காண வேண்டும் என்கிற உயரிய சிந்தனையில் உதித்தவை , கோவில்கள் – தன்னிகரற்ற ஆற்றல் மூலங்களாக மதித்து வழிபட வேண்டியவை
ஆனால் சந்தைப் பொருட்களைப் போலவே பக்தியும் பணத்திற்கு விற்கப்படுகிறது.
கோவில் -கடவுளின் பெயரில் காசு சம்பாதிக்கும் ஒரு வியாபாரத்தளமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
கோவிலுக்கு செல்லுதல் என்பது வெறும் சம்பிரதாய சடங்காக மட்டுமே நின்று விட்ட தற்போதைய நிலையில்.
கோவிலுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிற சத்தங்களுக்குள் அமைதியாய் ஒலித்துக்கொண்டிருக்கிற ஒரு மௌனத்தின் பதிவு… )
கடவுளைக் காண வேண்டி
கோவிலுக்குச் செல்லுகிற
எல்லோரையும் போலவே…
கடவுளின் முகவரி என்று முத்திரை தாங்கி
மூலைக்கு மூலை முளைத்து நிற்கும்
கோவில்களில் ஒன்றுக்கு சென்றிருந்தேன்….
கோவில்களின் வாசலிலேயே
எப்போதும் இருக்கிற
பிச்சைக்காரகளுக்கு உதவாத இறைவன்
எனக்கு மட்டும் உதவுவான்
என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில்
கோவிலுக்கு சென்றிருந்தேன்
உள்ளே சென்ற என்னை
உளமார வரவேற்றது
உணவு தேடி செல்லும்
எறும்புக் கூட்டம் போல
கடவுளை காண,
வரிசையாய் ஊர்ந்து கொண்டிருந்த வரிசை.
நீ எனக்கு “வேண்டியதைக்” கொடு
நான் உனக்கு “வேண்டியதை செய்கிறேன்”
-என்று கடவுளுக்கே படி அளப்பவர்களாலும்
நான் உனக்கு இவ்வளவு தருகிறேன்
நீ எனக்கு இதை முடித்துக் கொடு
-என்று கடவுளிடம் வியாபாரம் பேசுபவர்களாலும்
நிரம்பி வழிந்து கொண்டிருந்தது வரிசை
அனைவரும் சமமென்றும்
எல்லோரும் ஒன்றென்றும்
எப்போதும் சொல்லிக்கொள்ளும்
எல்லாம் வல்ல இறைவன்
தரம் வாரியாக
காட்சி தந்து கொண்டிருந்தான்.
அதிகம் பணமிருந்தால்
அன்பான உபசரிப்புடன்
அடுத்த நொடியே தரிசனம்
கொஞ்சம் குறைவென்றால்
சில நிமிட காத்திருப்புடன்
சிறப்பு தரிசனம்
இல்லாத ஏழையென்றால்
இறைவனின் கருணையில்
இலவச தரிசனம்
பக்கத்தில் உள்ளவனை
இடித்துத் தள்ளிக் கொண்டு
முந்திச் செல்பவனைப் பற்றி
முனகிக் கொண்டு
சத்தமான சலசலப்புடன்
அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது
பக்தர்கள் கூட்டம்
அன்பர்களின்
வேண்டுதல்களையும் வேண்டுகோள்களையும்
இறைவனுக்குப் புரியும் மொழியில்
மொழி பெயர்த்து
கற்சிலைகளின் காதுகளுக்குள்
மந்திரமாய் ஓதவும்
கற்சிலைகளின் முன்பு மட்டும்
இறைவன் புகழ் பாடவும்
சிறப்புப் பயிற்சி பெற்ற
பி.ஏ -க்கள் சகிதமாய்
அறைக்குள் அடைபட்டுக் கிடந்த்து
அண்ட சராசரத்தை ஆட்டுவிக்கும்அபார சக்தி
அமைதியை கூச்சலிடம்
அடமானம் வைத்துவிட்டு
அமிதியை தேடி
ஆலயம் வந்திருக்கிற
அன்பர்கள்
காசுக்குக் காட்சிப் பொருளாகி
கடவுளின் பெயர் சொல்லி
கதவுக்குள் முடங்கிக் கிடக்கும்
கற்சிலைகள்
கடவுள் இங்கில்லை என்று தெரிந்தும்
கடவுளைக் காண வேண்டி
கோவிலுக்குச் செல்லுகிற
எல்லோரையும் போலவே…
ஏதோ ஒரு நம்பிக்கையில்
கோவிலுக்கு சென்றிருந்தேன்
-விஜயன்
(பின் குறிப்பு: எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு)
அண்மைய மறுமொழிகள்